மலைப்பிஞ்சு மனிதர்கள்

எந்த இடம் என்பது இப்போது நினைவில் இல்லை. அது முக்கியமும் இல்லை. இமயமலைச்சாரலில் கங்கைநதியின் பிரவாகத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கரை ஒன்றின் ஓரம் நடந்து கொண்டிருக்கிறேன். என் காலில் தட்டுப்படும் கல் ஒன்று என் கூடவே ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதைக் கையில் எடுத்துப் பார்க்கிறேன். நம்மூர் சரளைக்கல்லைப் போல இல்லாமல் ஓரு உருளைக்கிழங்கைப் போல கூர்த்த முனைகளற்று எல்லா புறமும்வழுவழுவென்று இருக்கிறது.

எழுபதுகளில் எழுதப்பட்ட இலக்கியங்களில் கற்களைக் கற்கள் என்றுகூட எழுதமாட்டார்கள். அதை மலைப்பிஞ்சு என்று கொஞ்சம் கவிதையில் தோய்த்து எழுதுவார்கள். அந்தக் கல்லை நான் கையில் வைத்துக்கொண்டு மலையை நிமிர்ந்து பார்க்கிறேன். அதுமழுமழுவென்று இல்லை. வானத்தைப் பொத்துவிடும் கூர்மையோடு அதன் சிகரங்கள் குவிந்து நிற்கின்றன. மறுபடியும் கையைப் பார்க்கிறேன். ந்த மலையின் பிஞ்சா இது? கூர்மைகளை இழந்து மழுங்கிக் கிடந்து உருளும் இது அந்த மலையின் பிஞ்சுதானா?

பிஞ்சுதான். நதி அதனை உருட்டி உருட்டி விளையாடி அதன் கூர்மைகளை மழுக்கிவிட்டது. கூர்மையற்றுப் போனாலும் அது மலையின் பிஞ்சு தான். கூர்மையற்றுப் போனது குறித்து நாம் கோபித்துக் கொள்ள வேண்டுமானால் நதியைத்தான் கோபித்துக் கொள்ளவேண்டும். மறுபடியும் அந்த மலைப் பிஞ்சைப் பார்க்கிறேன். எனக்கு மலையின் ஞாபகம் வரவில்லை. மனிதர்களின் ஞாபகம் வருகிறது.

சித்திரை வெயிலைப் போல சுள்ளென்று கோபத்தோடு தங்கள் வாழ்க்கையைத் துவக்கிய இளைஞர்களை வாழ்க்கை நதி உருட்டி விளையாடி  அவர்களை மார்கழிப் பனி போலக் குளிரச் செய்த வாழ்க்கை  நினைவுக்கு வருகிறது.

வாழ்க்கை நதியால் உருட்டிப் புரட்டப்பட்டு மேடுகளையும், பள்ளங்களையும் சந்தித்து அந்த வீழ்ச்சியையும், எழுச்சியையும் ஒரு