திறமை இருக்கு மறந்துவிடாதே
இன்னும் சில நாள்களில் ஜூலை 23ஆம் தேதியன்று டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குகின்றன. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் தொடங்கியிருக்க வேண்டும். கொரானா காரணத்தால் தள்ளிப் போயிற்று. என்றாலும் இது ஒலிம்பிக் 2020 என்றே ஆவணங்களில் பதிவு செய்யப்படும்.
120 வீரர்கள் கொண்ட பெரும் படையை இந்தியா அனுப்புகிறது. இவர்களில் 53 பேர் பெண்கள் என்பது மட்டும் அல்ல, அவர்கள் ‘ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக’ என்ற வரலாற்றை எழுதப் போகிறார்கள். அந்த வரலாற்றை எழுதப்போகிறவர்கள் இருவரும் தமிழகப் பெண்கள்! ஒலிம்பிக்ஸில் முதல் முறையாக வாள் வீச்சுப் போட்டியில் (Fencing) இந்தியா பங்கேற்கிறது. அதில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்பவர் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி.அதே போலப் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் நேத்ரா குமணன்.
பெண்களின் உள்ள உறுதியைப் பார்க்காமல் அவர்களது உடலை மட்டுமே பார்த்து வந்த ஒரு காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் கூடப் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்காத ஒரு சமூகமாக இருந்தது இந்தியா.இன்று இந்தியப் பெண்கள் பளு தூக்குதல், குத்துச் சண்டை, மல்யுத்தம், வாள்வீச்சு, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுக்களில் கூட பங்கேற்கிறார்கள். எவ்வளவு பெரிய மாற்றம்!
அவர்கள் பங்கேற்றது மாத்திரம் அல்ல, அவற்றில் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார்கள்.இந்தியாவிற்காக ஒலிம்பிக்சில் முதல் முதலில் பதக்கம் வென்ற பெண் கர்ணம் மல்லேஸ்வரி.(அவர் தூக்கிய எடை 240 கிலோ!) அது 2000த்தில். பின் குத்துச் சண்டையில் மேரி கோம் (2012) அதே 2012ல் பாட்மின்டனில் சாய்னா நெஹ்வால்.2016ல் மல்யுத்தத்தில் சாக்க்ஷி மாலிக்.இவர்கள் வென்றதெல்லாம் வெண்கலப் பதக்கங்கள்தான். ஆனாலும் அவை இந்தியாவின் பொற்கணங்கள். போராட்டங்களுக்குப் பிறகு கிட்டுகிற எந்த வெற்றியும் பெருமிதத்திற்குரியவையே இவர்களில் சாய்னா நெஹ்வாலைத் தவிர பலரும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து முன்னேறியவர்கள். கிராமப் புறங்களில் விளைந்த கதிர் மணிகள்.
இம்முறையும் எளிய குடும்பத்தில் பலர் டோக்கியோ ஒலிம்பிக்சிற்குச் செல்கின்றனர். வேக நடை (race walking) என்றொரு பந்தயம். பிரியங்கா கோஸ்வாமி என்று ஒரு பெண் பங்கேற்கிறார்.அவரது தந்தை ஒரு பேருந்து நடத்துனர்.மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருக்கும் நேஹா கோயலின் பெற்றோர்கள் ஒரு சைக்கிள் தொழிற்சாலையில் பணி செய்யும் தொழிலாளர்கள். திபீகா குமாரியின் கதை எல்லோரும் அறிந்தது. அவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். தாய் ஒரு செவிலியர். தமிழக வீராங்கனைகளான ரேவதி, சுபா, தனலட்சுமி ஆகியோரும் எளிய பின்னணி கொண்டவர்கள்தான். “பவானியின் (வாள்வீச்சு வீரர்) பயிற்சி தொடர வேண்டும் என்பதற்காக இவரது அன்னை தனது நகைகளைக்கூட அடகு வைத்தார் என்பதை நான் ஒருமுறை எங்கோ படிக்க நேர்ந்தது” என்று பிரதமர் மோதி அண்மையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்தார்.
ஆண்களிலும் பலர் அப்படித்தான்.வில்வித்தை வீரரான பிரவீண் ஜதவ்வின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகள். குத்துச் சண்டை வீரர் மனீஷ் கெளசிக்கின் பெற்றோர்கள் விவசாயத் தொழிலாளர்கள்.
இவர்களுக்கு ஏன் இந்தியாவிற்கே நீங்கள் ஓரு சிறிய உதவி செய்ய முடியுமா? ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் #cheer4India என்ற ஹேஷ்டாகில் இந்தியா வெல்க! என்று வாழ்த்துக்களைத் தெரிவித்து வர முடியுமா?
*
பாரதியார் கறுப்பா சிவப்பா?
நமக்கு ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாது என்றால் ‘அவர் கறுப்பா சிவப்பா என்று கூட எனக்குத் தெரியாது’ என்று சொல்வது வழக்கம். ஆனால் பாரதியைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் கறுப்பா சிவப்பா என்று நமக்குத் தெரியாது!
“மிச்சமுள்ள கதைகள்” என்ற கி.ராஜநாராயணனின் நூல் அண்மையில் வெளியாகி உள்ளது. அதில் அவர் சந்தித்த ஒரு மனிதர் கி.ரா.விடம் பாரதி கறுப்பா சிவப்பா என்ற கேள்வியை எழுப்புகிறார்.
கி.ரா எழுதுகிறார்: “ நான் இவரைக் கொஞ்சம் வேடிக்கை பண்ணலாம் என்று நினைத்து, ‘பாரதி அவருடைய மீசை, தோரணை இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர் கன்னங்கரேர் என்று சொல்லாவிட்டாலும் வெறும் கறுப்பு என்று சொல்லலாம்” என்றேன்.
திடுக்கிட்டுப் பார்த்தார் என்னை.
நான் சொன்னேன் மேலும். “எட்டையபுரத்தில் மின்னும் சிகப்புகளை நான் பார்த்த ஞாபகமில்லெ.அடிக்கிற வேணாவெயில் கறுப்பாக்கிவிடும் மனுசனை.சுட்டுப் பொசுக்கும் வெயில், மண்ணையெல்லாம் கன்னங்கறுப்பாகியிருக்கிறதே.. மனுசனை மட்டும் விட்டு வைக்குமா? என்று கேட்டேன்.
புது நிறமாக வேண்டுமானால் இருக்கலாம். கன்னங்கறுப்பு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றார்
பொது (புது நிறம்) என்று ஒத்துக் கொள்ளத் தயார். கன்னங்கரேர் என்பதைத் தாங்கிக் கொள்ள முடியலை அவரால். பாரதி எப்படிக் கறுப்பாக இருக்க முடியும்?
பாரதியைப் பற்றி எத்தனை பேர் ஏகப்பட்டதுகள் சொல்லி என்ன பிரயோசனம்?
இன்ன நிறம் என்று சொல்ல வேண்டாமா?
அல்லது சொல்லியிருந்து நம் கண்ணில் படலையா?”
*
எண்ணித் துணிக
எந்த ஒரு செயலில் இறங்கும் முன்னும் நம் இயல்பு என்ன என்பது நமக்கு நினைவிருக்க வேண்டும். அதை நினைவுபடுத்தும் மீராவின் கவிதை ஒன்று:
பறவைகள் பேச்சைக்
கேட்டுக் கெட்டன
இலைகள், பாவம்…
பறக்க முடியாமல்
விழுந்து விட்டன
வறுமையைக் கண்டு பயந்துவிடாதே!
திறமை இருக்கு மறந்துவிடாதே!
மாலன்