வெயிலைப் போலொரு பதார்த்தம்
உண்டோ என்கிறான் மகாகவி
வெயில் ஒரு பதார்த்தம் எனில்
அதைத் தின்பது எப்படி?
இணையம் வழி
வினவினள் சகி
பூமிப் பந்தின்
வட கோளத்தில்
வாழ்ந்த நாட்களில்
வெயில் என்னைத் தின்றது
தென் கோளத்தே
திரியும் போதில்
வெயிலை நான் தின்று வாழ்கிறேன்
என்றான் கவி
மெய்ப்பையை உதறி மடித்து
• 02 அக்டோபர் 2014