என்ன ஆகும் எனது வாழ்க்கை?
அன்றொரு நாள் அம்மாவைக் கேட்டேன்
என்ன ஆகும் எனது வாழ்க்கை?
காற்றுப் போல் சுதந்திரமும்
கவிதை போல் தனிக் குணமும்
எப்போதும் உடன் வருமா?
என்ன ஆகும் எனது வாழ்க்கை?
கலைந்த தலையைக் காதில் ஒதுக்கி
அம்மா சொன்னாள் அணைத்துக் கொண்டு
கனவுகள் வேண்டாம் பெண்ணே
நேற்றைக்கு உன் போல் நானும்
நெஞ்சுக்குள் பூச் சுமந்து
நின்றதில் நினைவே மிச்சம்
எண்ணிப் புள்ளி வைத்து
இழையெடுத்துப் போட்ட கோலம்
வழிப்போக்கர் மிதிக்கலாச்சு
கனவுகள் விற்று அதிலே
வாழ்க்கையை வாங்கியாச்சு
நிஜத்தின் நிறங்கள் கண்டு
நீயேனும் ரசிக்கக் கற்க.
கனவுகள் வேண்டாம் பெண்ணே