டெசொ: கனவா? தீர்வா?

maalan_tamil_writer

இரண்டுகழகங்களுக்கிடையிலான ஈகோ பிரச்சினையில், தங்கம் விலை போல நிமிடத்திற்குநிமிடம் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த டெசோ மாநாடு இறுதியில் இனிதேநடந்தேறிவிட்டது. இனிதேஎன்றுதான் சொல்ல வேண்டும் வீர வசனங்களோ, கசப்புணர்வு கசியும் விமர்சனங்களோ அதிகம் இல்லாமல் முகமன்களோடும், புகழாரங்களோடும் முடிந்த அந்த மாநாடு 14 தீர்மானங்களைநிறைவேற்றியிருக்கிறது. அந்தத் தீர்மானங்கள் இலங்கைத் தமிழர்பிரச்சினைக்குத் தீர்வு தருமா? இல்லை அவை வெறும் காகிதப் புலிகள்தாமா?

 

இந்தத் தீர்மானங்களில் சில ஐக்கிய நாடுகள் சபை சில செயல்களை மேற்கொள்ளவேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றன, வற்புறுத்துகின்றன.சில மத்தியஅரசுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்கள். இரண்டு வகையான தீர்மானங்களும்உயரிய நோக்கங்கள் கொண்டவை. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கானசாத்தியங்கள் குறைவு.

 

ஐ.நா. சபை மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தை, இலங்கை அரசுஉறுதியுடன் நிறைவேற்றுகிறதா என்பதைக் கண்காணிக்க, மேற்பார்வைக் குழு ஒன்றைஐ.நா. சபை அமைக்க வேண்டும் என்கிறது ஒரு தீர்மானம்.



மார்ச் மாதம் 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித ஆணையக் கூட்டத்தில்அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 நாடுகளின் ஆதர்வையும், 15 நாடுகளின்எதிர்ப்பையும் பெற்று நிறைவேறியது. அந்தத் தீர்மானத்தில் அமெரிக்கா மூன்றுவிஷயங்களை வலியுறுத்தியது.
அவை: 1. சர்வதேச மனித உரிமைச் சட்ட மீறல்களை இலங்கை அரசு எவ்விதம் கையாளப்போகிறது. 2. இலங்கை அரசே அமைத்த LLRC விசாரணை குழுவின் பரிந்துரைகளை அதுஎப்படி அமல்படுத்தப்போகிறது. 3.ஐ.நாவின் மனித உரிமை அலுவலகம் இலங்கைஅரசுக்கு ஆலோசனைகளும், உதவிகளும் அளிக்க வேண்டும், அதை இலங்கை அரசு ஏற்கவேண்டும்.  

 

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஐ.நாவின் மனித உரிமை அமைப்பின்ஹைகமிஷர், ஓராண்டுக்குப் பின், அதாவது 2013 மார்ச் மாதம் வாக்கில் மனிதஉரிமை ஆணையத்திற்கு இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு எவ்வளவு தூரம்நடைமுறைப்படுத்தியது என அறிக்கை அளிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே இலங்கைஅரசை இது தொடர்பாக வற்புறுத்தி வருகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
அதற்கும் முன்பாக 2010ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், இதே மனித உரிமைமீறல்களைக் காரணம் காட்டி, இலங்கையுடனான வர்த்தகத்திற்க்கு இருந்தமுன்னுரிமையை விலக்கிக் கொண்டது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐநா ஆகியவற்றின் நிர்பந்தத்திற்குப் பணியாதஇலங்கை அரசா, டெசோவின் தீர்மானத்தைக் கண்டு மிரண்டு விடப் போகிறது?

இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்துகொள்ள, ஐ.நா. சபையில் இந்திய அரசுத்  தீர்மானம்  கொண்டு வர வேண்டும்என்பது  நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் ஒன்று. இதை ஒரு முக்கியமானதீர்மானம் எனக் கருதுகிறார் கருணாநிதி. இதை விட இந்திய அரசுக்கு எந்தவகையில் அழுத்தம் கொடுக்க முடியும் எனத் தெரியவில்லை?” என்று மாநாட்டில்பேசுகையில் கருணாநிதி கேட்டுள்ளார்.
கிழக்குத் தைமூரில் நடந்ததைப் போல, தெற்கு சூடானில் நடந்ததைப் போலஇலங்கையிலும் Referendum என்று சொல்லப்படும் ஒரு கருத்தாய்வை நடத்த இந்தியாஐநா மூலம் முயற்சி எடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்மானம்குறிப்பிடுகிறது என நினைக்கிறேன். ஆனால் அது போன்ற கருத்தாய்விற்கானமுயற்சியை இந்தியா ஒருபோதும் மேற்கொள்ள முன்வராது. காரணம் : காஷ்மீர்.
1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீர் தொடர்பாக இருநாடுகளின் படைகளுக்குமிடையே மோதல் ஏற்பட்ட போது ஐ.நா. தலையிட்டது. 1949ம்ஆண்டு அர்ஜெண்டினா, பெல்ஜியம்கொலம்பியா, செக்கோஸ்ச்லோவாக்கியா,அமெரிக்காஆகிய ஐந்து நாடுகளைக் கொண்ட ஒரு குழுவை காஷ்மீர் பிரசினையைக் கையாளஅமைத்தது. அந்தக் குழு காஷ்மீரின் எதிர் காலமென்ன என்பதை மக்களே முடிவுசெய்யட்டும். அதை அறிந்து கொள்ள கருத்தாய்வு நடத்த வேண்டும் எனப்பரிந்துரைத்தது ஆனால் இந்தியா இன்று வரை அதை ஏற்கவில்லை.

 

இன்று இலங்கையில் கருத்தாய்வு நடத்த வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழியுமானால், உடனே இலங்கை அல்லது பாகிஸ்தான் காஷ்மீரில் கருத்தாய்வு நடத்தவேண்டும் என எதிர்த் தீர்மானம் கொண்டு வரலாம். ஏற்கனவே முன்பு ஒரு முறைதமிழக அரசியல்வாதிகள் கருத்தாய்வு பற்றிக் குரல் எழுப்பிய போது, முதலில்காஷ்மீரிலும், பின் திராவிட நாடு வேண்டுமா என தென் மாநிலங்களிலும் இந்தியாகருத்தாய்வு நடத்தட்டும் என இலங்கையின் மின்சக்தி அமைச்சர் சம்பிக்கரணவாக்க சூடான பதிலடி கொடுத்தார்.
ஒருவேளை இலங்கை ஐநாவில் அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் எல்லா உலகநாடுகளும் இந்தியாவை ஆதரிக்கும் எனச் சொல்ல முடியாது. ஐநா மனித உரிமைஆணையத் தீர்மானத்தில்  ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவாகவாக்களித்தன.சீனா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய அண்டை நாடுகள் எல்லாம்இந்தியாவிற்கு எதிரான ஓர் அணியாகத் திரள்வதை இந்தியா விரும்பாது. எனவேஇந்தத் தீர்மானமும் வெறும் காகிதக் கணைதான்.

இதைத்தான் இந்தியஅரசுக்கு வைக்கும் உச்ச பட்ச அழுத்தம் எனக் கருணாநிதி சொல்கிறார். வேறுஎப்படி அழுத்தம் கொடுப்பது என்றும் கேட்கிறார். வேறு எப்படி அழுத்தம்கொடுப்பது என்பதை அவர் மம்தாவிடமும், சரத்பவாரிடமும்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அல்லது மன்மோகன் சிங் அரசு அமைக்கும் போது தனக்கு வேண்டியஅமைச்சகங்களைத் தனக்கு வேண்டியவர்களுக்குப் பெற்றுத் தர என்ன செய்தோம்என்று அவரே தனது நினைவடுக்கில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டியதுதான்

 

மத்திய அரசையும் வற்புறுத்தி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பது அதில் ஒன்று. இதை வலியுறுத்துவதற்குசென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மாநாடு தேவையில்லை. கருணாநிதியின் கட்சியும்மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. அதன் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக்கூட்டத்தில் இதை வலியுறுத்தலாம். அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்நாடாளுமன்றத்தில் வலியுறுத்தலாம். அல்லது யாரைக் கேட்டுக் கொடுத்தாய் எனஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கில் தன்னையும் ஒருவாதியாகச் சேர்ந்துக் கொள்ள மனுச் செய்யலாம். இதையெல்லாம் விட்டு இங்குதீர்மானமும் அங்கு சலாமும் போடுவதால் தீவு திரும்பி வந்து விடாது.

 

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்கவேண்டும் என மத்திய அரசைக் கோருகிறது இன்னொரு தீர்மானம். அசாம் எரிந்துகொண்டிருக்கும் போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்திற்குமத்திய அரசு எப்படி எதிர்வினையாற்றும் என்பது சின்னக் குழந்தையால் கூட்ஊகிக்க முடியும்.
மாநாடு கூட்டுவதும், தீர்மானம் போடுவதும், அவை நிறைவேற தீவிர முயற்சிகள்மேற்கொள்ளாமல் இருந்து விட்டு பல வருடங்கள் கழித்து நாங்கள் அன்றைக்கேதீர்மானம் போட்டோம் என வரலாறு பேசுவதும் திமுகவிற்கு வாடிக்கை. ஒருதீர்மானம் போட்டால் அதை நடைமுறைப்படுத்திவிட்டுத்தான் ஓயும் என்ற நிலைஎன்றும் திமுகவிடம் இருந்ததில்லை. அதன் மாநில சுயாட்சித் தீர்மானங்கள் ஓருதலை சிறந்த உதாரணம். இந்தத் தீர்மானங்களும் அப்படி ஆனால் ஆச்சரியப்படஏதுமில்லை.

 

மாநாட்டின் தீர்மானங்கள் நடைமுறைக்கு வர வேண்டுமானல் மத்தியில் ஆளும்காங்கிரசின் எண்ணங்களும் திமுகவின் கருத்துக்களும் இலங்கைப் பிரச்சினையில்ஒரே நேர்கோட்டில் வர வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு.தனி ஈழம் பற்றிப் பேசுகிற மாநாடல்ல, மறுவாழ்வு, புனரமைப்பு போன்றவிஷங்களைப் பேசுகிற மாநாடுதான் என்ற போதிலும் கூட காங்கிரஸ் இந்தமாநாட்டைப் புறக்கணித்து விட்டது. அது  மட்டுமல்ல, மத்திய அமைச்சரவையில்உள்ள காங்கிரஸ் அல்லாத அமைச்சர்கள் பங்கேற்பதைக் கூட அது விரும்பவில்லை.அதனால் சரத் பவாரும், பாருக் அப்துல்லாவும் தங்கள் பிரநிதிகளை அனுப்பிவைத்தார்கள். தனித் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் கூடாது என்று மத்திய அரசுவற்புறுத்தியதாகச் செய்திகள் கசிந்தன. ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்த சிலநிபந்தனைகளின் பேரில்தான் அனுமதி அளித்தது. இலங்கையிலிருந்து பங்கேற்கஅழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு விசா கொடுக்கவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர ஆர்வம் காட்டி, அதன் பொருட்டுச்சிறைக்கும் சென்ற பழ.நெடுமாறன், வைகோ, சீமான், தியாகு போன்றவர்கள் இந்தமாநாட்டில் பங்கேற்கவில்லை.இலங்கைப் பிரச்சினை குறித்துப் பேசி வருகிறமருத்துவர் ராமதாசையும் மாநாட்டில் காணோம். இலங்கைத் தமிழர்கள் நாடு கடந்தஅரசுஎன்ற ஓர் அமைப்பை நடத்தி வருகிறார்கள். அதற்குத்தமிழ்நாட்டிலிருந்தும் பிரநிதி ஒருவர் உண்டு. அவர் சென்னையிலேயேவசிக்கிறார். அவரும் கூட இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

 

தனி ஈழம் தன் நிறைவேறாத கனவு அதற்குப் போராடப் போகிறேன் என்கிறார்கருணாநிதி உண்மையிலேயே அவர் அப்படி விரும்புகிறார் என்றால் முதலில் அவர்தமிழ்நாட்டு அரசியல் சக்திகளிடையே ஓர் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்ஈழம் குறித்துப் பேசி வருகிற நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களை அழைத்துப்பேச வேண்டும். அடுத்த கட்டமாக உலகத் தமிழர்களிடையே ஓர் ஒருங்கிணைப்பைக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். ஆனால் இவற்றிற்கெல்லாம் அவரது கட்சிகாங்கிரசுடன் வைத்திருக்கும் உறவு தடையாக இருக்கும்.

 

ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறவே திமுக இந்தமாநாட்டை நடத்தியுள்ளதாக, மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை நவ சம சமாஜ்கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணரத்தின கூறியுள்ளார்.  “இலங்கையில் 2009ல்இறுதிப்போர் நடைபெற்ற போது தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார்என்பது உணமைதான். அதே சமயம் இப்போது கருணாநிதி மேற்கொள்ளும் நடவடிக்கைகள்சரியானது என்றே கருதுகிறோம். அதன் காரணமாகவே நான் மாநாட்டில்பங்கேற்கிறேன். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து அவர் வெளியேறத்திட்டமிட்டுத்தான் இந்த மாநாட்டை நடத்துவதாகக் கருதுகிறேன்என்கிறார் அவர்(தினமணி ஆகஸ்ட் 13)அப்படியும் நடக்குமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.