மனம் எனும் வனம்


 என்னுடைய மா  மரத்தில்

சில இலைகள் செம்பு நிறம்

செம்பு நிறம் பெண்கள் நிறம்

நாள் போக மாற்றமுறும்

 

வேதாளம் இருக்குதென

பயம் காட்டும் முருங்கை மீதில்

அணிப் பிள்ளை ரகளை செய்யும்

 

பட்டைக்குள் விட்ட கண்ணீர்

பசையாக ஒட்டிக் கொள்ளும்

 

முள்ளாகச் சுமையேற

முதுகொடிந்த கிழ மூங்கில்

 

கிளியில்லை இப்போது

மிருகமும் செத்துப் போச்சு

தென்றல் மட்டும் ஊடுருவி

தேடும் அதன் நண்பர்களை

 

2 thoughts on “மனம் எனும் வனம்

  1. K.Ramaswamy

    one sentence vedalam bhayam kattum marqthinilay anil kunjugal bayamindri adum is superb.

    mr. malan have you published your views on the writings of manikkodi writers karichankunju la sa ramamirtham thevan chavi etc etc

    Reply

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *