உறவுகள்

குரு-சிஷ்யன் உறவு,தந்தை-மகன் உறவு,தாய்- மகள் உறவு,அண்ணன்-தம்பி உறவு, அக்கா-தங்கை உறவு எப்படி இருக்க வேண்டும்?

குருவின் உறவு நிலம் போல.நாம் நிமிர்ந்து நிற்பதற்கும்,மலர்ந்து சிரிப்ப தற்கும் அதுதான் ஆதாரம். ஆனால் விளைவது விதையைப் பொறுத்தது.
தந்தை மகன் உறவு காற்றைப் போல. கட்டிப் போட முடியாது. பருவத்திற்குத் தகுந்தாற் போல் வேகம் கூடும்;குறையும்.
அண்ணன் தம்பி உறவு அக்னி.ஒளியும் இருக்கும். உஷ்ணமும் உண்டு.
தாய்-மகள் உறவு தண்ணீர். பாத்திரத்திற்கு ஏற்ப வடிவங்கள் மாறும். ஆனால் அடிப்படை குணங்கள் மாறாது.
அக்கா தங்கை உறவு ஆகாசம். தொலை தூரத்திற்கு விலகிப் போகலாம். ஆனாலும் எப்போதும் ஈரம் இருந்து கொண்டிருக்கும்.

-வை.கார்த்திகேயன், ஆராம்பாளையம். குமுதம் 05-02-98 இதழில் ஆனந்தா பிரசர் குக்கர் பரிசுக் கேள்வியும், அரசு பதிலும்(அன்றைய ஆசிரியர் மாலன் பதில் )

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these