அழியாத அன்பு
ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் – அந்தக்கரவொலிகளைக் கண்ட இசைக் கலைஞர் கையில் முகம் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார். ஏன்?முதுகுத் தண்டு சிலிர்த்தது.விடிகாலைப் பனியில் கிணற்றடி ஈரத்தில் கால் வைத்த மாதிரி,கடைவாயில் பாலொழுக புன்னகைக்கும் குழந்தையின் சிரிப்பைக் கண்டகணம்போல, விடைபெற்றுப் போகிற தருணத்தில் சற்றும் எதிர்பாராமல்கன்னத்தில் பதிந்த காதலியின் முத்தம் போல, சிலிர்ப்பில் நனைந்து மனம்இளகியது.எல்லாம் அந்த சிம்பொனி செய்த வேலை. உள்ளம் சிலிர்த்து விம்மசிம்பொனி முடிந்த நொடி கூட்டம் எழுந்து நின்றது. அரங்கம் அதிர கரவொலிஎழுப்பியது. அதை ஏற்றுக்கொள்ள இசையமைப்பாளர்,