அறிமுகம்

  1. V.Narayanan (Maalan)

Writer – Journalist -Broadcaster

V.Narayanan (Maalan) is an eminent bilingual (Tamil and English) writer and journalist, who has contributed substantially to literature, language, journalism and for the welfare of the community in various ways.

 Esteemed Writer 

He is a recipient of Sahitya Akademi’s (National Academy of Letters) Translation Prize for the year 2021 and was awarded the coveted Bharaiya Basha Parishad award for wholesomeness in creativity (‘Krititva Samagra Samman’) in 2017. The government of Tamilnadu honoured him with the Best Translator award in 2019. He is also a Lee Kong Chian Research Fellow of Singapore, the first and the only Indian to receive that honour. He was a Member of the General Council of Sahitya Akademi (National Academy of Letters) and a Member of  General Council of Lalit Kala Akademi (National Academy of Arts). He is also a Foundation member of the Raja Rammohun Roy Library Foundation (National Mission for Libraries) He is the Convenor for Tamil Basha Samiti of Saraswathi Samman.

He was invited as Chief Guest for Writers Week of Singapore (1995), Indian Reading Festival Singapore (2003) Read Singapore (2013) and as a speaker in Festival of India -Malaysia,  in Forum for Literature Development organised by  China Writer’s Association (2018) London Tamil Literary Forum (2016)

 The National University of Singapore, University of Melbourne, Australia, University of Malaya, and Beijing Foreign Studies University, are some of the foreign universities that have invited him to give lectures   

Distinguished Journalist

 As a distinguished journalist, he had the distinction of leading the premier Tamil journals namely India Today (Tamil) Dinamani, Kumudam and Kungumam, Puthiya Thalaimurai as its Editor. He is also considered as a pioneer among Tamil television journalists as was the founding Editor of Sun News Channel of Sun Television network which is the first 24×7 news channel in any regional language. He retired as Director –Planning and Development of Puthiya Thalaimurai TV in 2016

He considers one of the proud moments in his career was when Prime Minister Modi tweeted enclosing one of his columns on  16 July 2020.  PM urged Indian youth to read Thirukural in that tweet

He has accompanied Prime Ministers Shri.P.V.Narasimha Rao, Shri.A.B.Vajpayee and President Shri. K.R. Narayanan on their state visits as a part of their media delegation.. He has covered international events of significance like CHOGM 1999 at Durban and India -EU Summit at Portugal in 2000.

He was nominated by Governor Dr. Chenna Reddy and Governor Surjit Singh Barnala to various university senates

He has served on the Boards of Studies of Journalism at various universities.

He was the Founder-Editor of the first Unicode-based E-zine in Tamil  Thisaigal.  Later he founded Akshra a multi-language literary magazine on Indian Literature

Three decades ago, even before the arrival of satellite televisions, when live telecasts were rare, he has anchored the live election analysis for Doordarshan Kendra Chennai during the 1991 elections

He was a regular broadcaster in BBC Tamil service for over 10 years, presenting a Newsletter every month from 1989 to 2000

He has also served as the National Media Advisor for India for The Hunger Project, a global movement committed to ending chronic hunger in the world.

Standing as a writer

Publications:

  • He has 20 books to his credit
  • Two of his books (Jana Gana Mana, Sangeet Vidwan) are translated into Hindi and two in English ( GG, The Phantom Tiger)
  • Some of his short stories are translated into Chinese, Malay, and French.
  • Many of his short stories are translated into Indian languages like English, Hindi,Malayalam, and Telugu 
  • His short stories and poems find a place in the anthologies of Sahitya Akademi and many national magazines and journals
  • His poem finds a place in Voices of Emergency, an anthology of protest poetry compiled by Prof John Oliver Perry of Tufts University, USA
  • He has compiled and edited four books for Sahitya Akademi,two among them were on Tamil diaspora writing.He has also compiled and edited  two volumes of Tamil short stories for Orient Longmans (now black Swan) 
  • He has translated Cyrus Mistry’s award-winning novel for Sahitya Akademi and Sojourners and Settlers for the National Heritage Board, Singapore

Awards

 International

Lee Kong Chian Research Fellowship –National Library Board, Singapore 

One of the two Indian delegates selected by the Japan Junior Chamber for the 7th JC Youth Voyage in 1977 

 National

Sahitya Akademy’s Translation Prize 2021

 Krititva Samagra Samman –Bharatiya Basha Parishad, Kolkatta

Lifetime achievement award – Dakshin Bharat Hindi Prachar Sabha (National Institute of eminence founded by Mahatma Gandhi)

Best Book of the Year- Central University, Pondicherry (1990)

State

Best Translator Award – Government of Tamilnadu 2019

Others

 Kamban Virudhu- Kamban Kazhagam Chennai, Tamilnadu

 Kannadasan Virudhu- Kannadasan Kazhagam, Coimbatore, Tamilnadu

 Lifetime achievement award- Uratha Sinthanai, Chennai, Tamilnadu

 Best writer-Neyveli Lignite Corporation Book Fair-Neyveli, Tamilnadu

In Esteemed Bodies:

Member, General Council, Sahitya Akademi (2018-2022)

(Nominated by the Government of Tamilnadu)

Member, General Council, Lalit Kala Akademi (2020-till date)

(Nominated by Ministry of Culture, Govt of India)

Foundation Member Raja Rammohan Roy Library Foundation (2020-till date)

(Nominated by Ministry of Culture, Govt. Of India)

Member Tamil Advisory Board – Sahitya Akademi (2012-2018)

Member,Final Jury (Chayan Parishad)  for Saraswathi Samman of KK Birla Foundation

Senate Member Manonmaniam Sundranar University

(Nominated by the Governor of Tamilnadu)

Senate Member Bharathidasan University 

(Nominated by the Governor of Tamilnadu)

Member Tamil Advisory Board –National Book Trust (1994-1999)

Member, Editorial Board –Translations Today ( a publication by Central Institute Of Indian Languages, under the auspices of Ministry of Human Resources Govt of India)

Board of Studies for Tamil Literature (PG), University of Madras

Member, Board of Studies for Journalism, Madurai Kamaraj University

Member, Advisory Committee to revamp public libraries, Government of Tamilnadu 

Member Advisory Panel Literacy Mission, Government of Tamilnadu

International Recognitions:

Guest of Honour- Writers Week (1995) Singapore

Chief Guest – Reading Festival (2003) Singapore

Workshop Leader –Short Story writing workshop in Tamil organised by National Book Development Council of Singapore 2011

Read Singapore (2013) Singapore

Judge Tamil Literary Garden Award, Canada (2013)

Jury Singapore Literature Prize (2014) Singapore

Judge, Malaysian Tamil Writers Association Fiction Contest (2015) Malaysia

London Tamil Literary Forum (2016) UK

Forum for Literature Development, China Writers Association (2018) China

Guest Speaker, Festival of India at Malaysia

(organised by the High Commission of India, Malaysia)

He has been invited by many international literary forums consistently for more than 25 years

Academic Recognitions

St.Xavier’s College, Palaymcottai, an autonomous institution of 90 years standing with A++  ranking from NACC organised a one-day seminar on the works of Maalan wherein Professors from Madurai Kamaraj University, Manonmaniam Sundaranar University and two Sahitya Akademi awardees discussed his works.

His book was a book on contemporary writing in Madurai Kamaraj University and in Kerala University.

Standing As Journalist

 Invited to accompany Prime Ministers Narasimha Rao, Vajpayee and President K.R.Narayanan on their trips to various countries as a part of their media delegation

He considers one of the proud moments for him was when Prime Minister Modi tweeted enclosing one of his columns on  16 July 2020.  PM urged Indian youth to read Thirukural in that tweet.

Appointed as a member of Senates of Manonmaniam Sudaranar University, Tirunelveli, and Bharathidasan University, Tiruchy by various Governors of Tamilnadu

He was the only Indian journalist to be invited to the Media Leaders Round Table organised by Boao Forum, China consecutively for three years 2014, 2015, 2016

Was an Invitee to the India –Pakistan Media Retreat on Composite Dialogue organised by PANOS South Asia

Invited to deliver a talk by the British Council at the conference on Media, Public interest and issues of regulation of Indo-UK Perspectives

Member of Commonwealth Journalists Association

National Media Advisor for India for The Hunger Project, New York.

Member Programme Advisory Committee –Doordarshan Kendra, Chennai (1988)

Interviewed in BBC,(England),  China Central Television (China), IBC (Europe) Astro (Malaysia) Vasantham (Singapore) and Maharaja (SriLanka) televisions and BBC (London) CRI (Beijing) SBS (Australia) Oli-Media Corp (Singapore) SLBC (Srilanka) radios on various occasions.

 Community Service 

 Fighting Drug Abuse

Along with renowned Tamil writer Sivasankari, Maalan co-founded a public charity trust Awakened Group for National Integration  (AGNI) in 1986. AGNI organised various  programs for youth and the most important among them  is its fight against drug addiction  Three important projects of Agni in its fight against drug abuse are :

 PROJECT – LET US SAY NO TO DRUGS: AGNI launched a campaign titled ‘Let Us Say No to Drugs’ in December 1987, under which a 22-minute video film in Tamil titled ‘Ore Oru Tharam’ (meaning Just Once) was produced. Renowned film producer A.V.M. Productions, Chennai, made 100 prints of the same and the Rotary International Dt. 323 helped in taking this film to 1,00,000 children in Tamil Nadu.

A signature campaign was organized, in which more than 50,000 signatures were collected from people of Tamil Nadu asking for stringent punishment to drug pushers and peddlers, and the petition was handed over to the then Prime Minister Shri Rajiv Gandhi, which contributed to the amendment of the law.

PROJECT – SURVEY ON LEVEL OF ADDICTION: On a request from the Welfare Department of the Government of India, a survey on the level of addiction among slum dwellers in the three major cities namely, Chennai, Bangalore and Hyderabad was conducted. With the able co-operation of ‘ADAPT’, the Rehabilitation Centre of Apollo Hospitals, this survey was carried out successfully. It was a shocking revelation that 57% of the slum dwellers in Chennai – mostly industrial workers and daily labourers – were alcoholics

PROJECT – RAJAJI CENTRE FOR DE-ADDICTION: This survey necessitated the launching of a massive awareness campaign amongst industrial labourers and slum-dwellers against alcohol. In January 1990 AGNI ventured on a macro-level programme. While conducting the awareness programmes in the slums, AGNI felt the dire need for a de-addiction centre for the economically weaker section of society. And AGNI was instrumental in starting ‘Rajaji Centre for De-Addiction’ in the Voluntary Health Services Hospital at Taramani in Chennai on 14.11.1991

 Empowerment of Woman

As the National Media Advisor of The Hunger Project a global organisation headquartered in New York, he worked to create media awareness on issues related to women empowerment at the grass-root level. Panchayat Raj, the third tier of government,  was created in 1992 through a constitutional amendment. It was mandated that a third of seats in Panchayat be reserved for women. This brought one million women, most of them for the first time, into the local governance.  On behalf of The Hunger Project, he trained the newly elected women representatives on how to handle the media.

Through AGNI a foundation co-founded by him, he launched a campaign ANBU (Awareness Needed for Betterment of Underprivileged) to bring awareness on discrimination against women: In India, women are discriminated against from birth. To de-condition the minds of people from this attitude and to give the woman her due place in society AGNI produced four television spots with famous film stars and an audiotape with the help of the Global Hunger Project in India. They were telecast and broadcast frequently and the cinema houses were requested to show the spots for a year.

Strengthening National Integration

Through AGNI  a Project, called BHARAT DHARSHAN was organised to inculcate national Integration in the minds of school children. In the year 1986, twenty extraordinary students were hand-picked from various schools of Tamil Nadu, were taken on a tour to New Delhi and were made to take a pledge at Rajghat that they will strive to become better citizens and human beings in future.

 AGNI launched another project KAVIRATHRI with writers and poets. ‘A Day of Literature’ inviting top writers, poets and journalists from all four southern states of India to read their works to the audience in their respective languages and thus building up a fellowship among people of various states, irrespective of their language differences, was organized twice.

Skill Building for Youth

  Intending to channelize the potential of the youth in the proper way, AGNI had a very effective training programme ‘Leadership Education Action Programme’ (LEAP) which was launched for 50 teenagers in Mayiladuthurai in February 1995. Keeping the holistic development of the participants in mind, interesting workshops on leadership training, problem-solving skills, positive thinking and effective communication were designed in consultation with experts. By the end of the programme, there was an excellent response from the youth who are sure to emerge as better human beings and committed citizens of India.

Disaster Management

He played a leading role in developing a disaster management plan for 17 village panchayats in Tsunami affected Nagapattinam District in Tamilnadu for The Hunger Project. Every village in the panchayat was mapped, every household member including cattle was listed, potential threats were identified, possible shelters were located and a list of helplines was provided in these maps..The maps were digitised apart from printed hard copies for better preservation.

Literacy Movement

He was appointed as a member of the steering committee to eradicate illiteracy by the Government of Tamilnadu in 1997. During his tenure, he organised literacy camps in various districts of Tamil Nadu.

Library Movement

Served in the Government Of Tamilnadu’s Committee to revamp the public libraries. Through his efforts, Readers’ Circle (Vasakar Vattam) were created in every public library. He advocated for making public libraries community-oriented and inviting readers’ suggestions for buying books for public libraries.

Currently, he is a Foundation member of Raja Rammoan Roy Library Foundation.

Information Technology

 He played a key role in validating the Tamil version of the  Microsoft Office Suite and compiled a  Community Tamil Glossary of technical terms related to Information Technology. He served as the Editor of Minmanjari, a journal for Tamil computing published by the International Forum for Information Technology in Tamil (INFITT). He was a member of INFITT’s Executive Board. from 2001 to 2010  

 Journalism Education

He has served on the Board of Studies of Journalism of Madurai Kamaraj University and Madras University.

OTHER  DETAILS

Invited by the following Universities to give lectures

  1. National University of Singapore
  2. University of Melbourne
  3. University of Malaya
  4. Beijing Foreign Studies University
  5. Jawaharlal Nehru University
  6. Tamil University, Thanjavur
  7. University of Madras
  8. Madurai Kamaraj University
  9. Bharathiyar University
  10. 10 Anna University

Travel:

He has travelled extensively in India and abroad. He has visited the United States of America, United Kingdom, Canada, China, Japan, Australia, Philippines, Thailand, Portugal, Indonesia, Singapore, Malaysia,  South Africa, Italy, Sri Lanka and Nepal on invitations

Personal Information:

Name in Full : VENKET SUBRAMANIAN NARAYANAN 

Shortly: V, NARAYANAN

Widely Known Pen Name: MAALAN NARAYANAN

Date of Birth: 16 September 1950

Place of Birth: Srivilliputur, Tamilnadu

Permanent Address:  40, Journalists Colony

                              Srinivasapuram

                              Thiruvanmiyur

                              Chennai 600041

                              India

E-mail: maalan@gmail.com

Website:www.maalan.co.in

Mobile Phone: +91 9500065652 

 

——————

மாலன்

மாலன்

திசைகள்,குமுதம், தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குங்குமம், புதிய தலைமுறை, புதியதலைமுறை கல்வி ஆகிய தமிழகத்தின் முன்னணித் தமிழ் இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய  மாலன் தனது எழுத்துலகப் பயணத்தை இலக்கியச் சிற்றேடுகளில் துவக்கியவர். மணிக்கொடி எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் மூலம் 15 வயதில் கவிதைக்கும், தனது கவிதைகள் மூலம் இலக்கியத்திற்கும் அறிமுகமான இவர் பாராட்டப்படுவது பத்திரிகைப் பணிகளுக்காக மட்டுமல்ல,  இவரது படைப்பிலக்கியங்களுக்காகவும்தான் .

‘ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படி இருக்கும்? இதோ இப்படி இருக்கும்’ என ஆனந்தவிகடன் இவரது சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதியது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற முன்னோடிகளாலும், சிட்டி, வல்லிக்கண்ணன் போன்ற விமர்சகர்களாலும்,பிரபஞ்சன், அ.முத்துலிங்கம்,  பா.ஜெயப்பிரகாசம், பொன்னீலன்,  போன்ற அவரது சமகாலத்தவராலும்,  எஸ்.ராமகிருஷ்ணன், பாரதிபாலன் போன்ற அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளாலும் பாராட்டப்பட்ட இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பலகலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இவரது படைப்புக்கள் குறித்து ஒரு முழுநாள் கருத்தரங்கை நடத்தியது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழகத்தின் பல பல்கலைக் கழகங்களில் ஆறு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.

 இவரது கதைகள் ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும், சீனம், மலாய், பிரன்ச் ஆகிய சில அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் A Phantom Tiger and other stories என்ற நூலாகவும், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் சங்கீத் வித்வான்  என்ற நூலாகவும் வெளியாகியுள்ளன. இவரது புகழ் பெற்ற நாவல் ஜனகணமன ஆங்கிலம் ,இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது சிறுகதைகள் சர்வதேச சிறுகதைத் தொகுப்பான Unwinding and other contemporary stories என்ற நூலிலும், கல்கத்தாவில் உள்ள Writers Workshop வெளியிட்ட Modern Tamil stories தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன.இவரது கவிதை ஒன்று அமெரிக்காவிலுள்ள டஃப்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரி தொகுத்த Voices of Emergency-an anthology of protest poetry என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.  இவரது கவிதைகளும், கதையும்  சாகித்ய அகதாமியின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன ஃபிரான்சில் உள்ள ழார்ழோ என்ற இடத்தில்  2021ஆம் ஆண்டு ஜுன்  1-5 தேதிகளில் நடைபெற்ற இலக்கிய விழாவில், ஃபிரன்ச் நாடகக் கலைஞர்கள் அவரது சிறுகதைகளை வாசித்தார்கள்

நூல்களில் மட்டுமின்றி  இவரது  படைப்புக்கள், இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா,(ஆங்கிலம்) டெகான் ஹெரால்ட், (ஆங்கிலம்) இந்தியா டுடே  (மலையாளம்) மாத்ருபூமி (மலையாளம்) விபுலா(இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.  சாகித்ய அகாதெமியின்  இந்தியன் லிட்ரச்சர், தி ஹிண்டு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட ஆங்கில இதழ்கள் இவரது படைப்புக்களை விமர்சித்துள்ளன. இவரது கதை ஒன்றை தமிழின் சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.   .

சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடத்தப்படும் ‘எழுத்தாளர் வாரம்’  நிகழ்ச்சிக்கு 1993ம் ஆண்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு நிறுவனமான நூல்கள் மேம்பாட்டு மன்றத்தால் (Singapore National Book development Council) அந்நாட்டுப் படைப்பாளிகளுக்குப் புனைகதைப் பயிலரங்கு நடத்துமாறு அழைக்கப்பட்டவர்.2013ம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் (National Library Board) நடத்திய வாசிப்போம் சிங்கப்பூர் (Read Singapore!) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டவர்.  சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, மலேசிய எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, கனடாவில் உள்ள இலக்கியத் தோட்ட விருது ஆகியவற்றிற்கான சர்வதேச நடுவராகப் பணியாற்றுமாறு அழைக்கப்பட்டவர்.

சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர்களில் இவர் ஒருவர்.லலித் கலா அகாதெமி பொதுக்குழு உறுப்பினர். ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையின் அறங்காவலர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை தமிழ் இலக்கியப் பாடத் திட்டக்குழு உறுப்பினர். [Member Board of Studies Tamil Literature (PG)]

இலக்கியம், மொழி குறித்து இவரை உரையாற்ற அழைத்த  பல்கலைக்கழகங்கள்:

மெல்பேர்ன் பல்கலைக்கழகம், மெல்பேர்ன், ஆஸ்திரேலியா

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் – சிங்கப்பூர்

மலேயா பல்கலைக்கழகம் – கோலாலம்பூர், மலேசியா

பெய்ஜிங் அயலகக் கல்வி பல்கலைக்கழகம் –பெய்ஜிங்- சீனா

ஜவஹர்லால் பல்கலைக் கழகம் –புதுதில்லி- இந்தியா

தமிழ்ப்பல்கலைக் கழகம் – தஞ்சை இந்தியா

சென்னைப் பல்கலைக்கழகம்- சென்னை, இந்தியா

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை, இந்தியா

பாரதியார் பல்கலைக்கழகம் –கோவை, இந்தியா

அண்ணா பல்கலைக்கழகம்- சென்னை, இந்தியா

விருதுகள்

அயலக விருதுகள்

சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கும் லீ காங் சியான் புலமைப் பரிசில் (Lee Kong Chian Fellow- National Library Board, Singapore) (இதனைப் பெற்ற ஒரே இந்தியரும், தமிழரும் இவரே)

Academic Excellence in Advanced Editing –University of Florida, USA

தேசிய அளவிலான விருதுகள்

சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு 2021

பாரதிய பாஷா விருது- கல்கத்தா

வாழ்நாள் சாதனையாளர் விருது – தட்சிணபாரத் இந்தி பிரசார சபா, சென்னை

 

தமிழக விருதுகள்

தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

கம்பன் விருது- கம்பன் கழகம், சென்னை

கண்ணதாசன் விருது- கண்ணதாசன் கழகம். கோவை

வாழ்நாள் சாதனையாளர் விருது- உரத்த சிந்தனை இலக்கிய அமைப்பு சென்னை

படைப்புலகச் சிற்பி விருது- உறவுச் சுரங்கம்

சிறந்த எழுத்தாளர் விருது- நெய்வேலி புத்தகக் காட்சி

பிற சிறப்புகள்

1997ஆம் ஆண்டின் சிறந்த நூல் (மாறுதல் வரும்-சிறுகதைத் தொகுப்பு) பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது சிறுகதைகள் இடம் பெற்ற தொகுப்புகள்;

One Sky – National Library Board.  Singapore

Modern Tamil Stories –Writers Workshop. Calcutta

Unwinding and other Contemporary Stories –Emerald Publishers

Greatest Tamil Stories Ever Told – Aleph Book Company

மொழிபெயர்க்கப்பட்ட கவிதை வெளியான நூல்

Voices of Emergency –Anthology of Protest Poetry

ஆங்கிலக் கட்டுரை வெளியான தொகுப்பு

Chapters on Asia –National Library Board, Singapore

பத்திரிகைப்பணியில் மாலன்

தமிழின் முதல் இளைஞர் இதழான திசைகள் இதழின் ஆசிர்யராக தனது இதழியல் பணிகளைத் துவக்கியவர்.” எண்பதுகளில் எழுத வந்த அத்தனை இளைஞர்களும் உச்சரித்த மந்திரச் சொல் மாலன்’ என விமர்சகர்களால் குறிப்பிடப்படும் இவர், இலக்கிய சிற்றேடு, நாளிதழ்,  பருவ இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என அனைத்து வகை ஊடகங்களிலும் செயலாற்றிய ஒரே தமிழ்ப் பத்திரிகையாளர்.

தமிழ்  இதழியலின்  முன்னோடிகளான ஏ.என். சிவராமன், சாவி, எஸ்.ஏ.பி அண்ணாமலை ஆகியோர் அமர்ந்த  நாற்காலிகளில் அவர்களுக்குப்் பின் அமர்ந்த ஒரே பத்திரிகையாளர் என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிடுகிறார்.

தமிழின் முன்னணி இதழ்களான   இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம்  குங்குமம், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். வாசகன், கணையாழி ஆகிய இலக்கியச் சிற்றேடுகளிலும் ஆசிரியராகப் பங்களித்தவர். இவற்றில் இந்தியா டுடே, புதிய தலைமுறை, புதிய தலைமுறைக் கல்வி ஆகியவை,  அது வரை வெளிவந்து கொண்டிருந்த இதழ்க்ளைப் போன்று இல்லாமல் பொருள் புதிது, சொல் புதிது என்று அமைந்தவை.  அவை  முன்னுதாரணம் இல்லாதவை. அவற்றின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்ற  மாலன் அவற்றின் மூலம் தமிழ் இதழியலுக்குப் புதிய பரிமாணம் அளித்தார்.

 இந்திய மொழிகளில் முதன் முதலில் துவக்கப்பட்ட 24மணிநேர செய்தித் தொலைக்காட்சியான சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தியவர். அதன் மூலம் செய்திகளை அறிந்து கொள்ள  மக்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, செய்தி மக்களுக்காக  எந்நேரமும்  காத்திருக்கும், அதை அவர்கள் உட னு க்குடன்் அவை நிகழும் போதே அறிந்து கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தியவர்.

1991 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான  போது அவற்றை  உட னுக்குடன்் தூர்தர்ஷனுக்காக நேரலையில் வழங்கியவர் மூவர். ஆங்கிலத்தில் பிரணாய்ராய், ஹிந்தியில் துவா, தமிழில் மாலன். கருத்துக் கணிப்புகள், செய்தியின் பின்னணித் தகவல்கள், விவாதங்கள், முக்கிய நிகழ்வுகளை நேரலையில் வழங்குதல் என்பனவற்றைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்தியவர் . சன் தொலைக்காட்சியில் 870 நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

“என்னுடைய இதழியல் பணிகள் யாவும் தமிழ் இதழியலின் விளிம்புகளை விரிவாக்குவதாகவே அமைந்தன என்பதில் மகிழ்வும் மன நிறைவும் கொள்கிறேன்” என்கிறார் மாலன்

பிபிசியின் தமிழ்ச் சேவைப் பிரிவான தமிழோசையில் 10 ஆண்களுக்கு மேலாக மாதந்தோறும் செய்தி விமர்சனங்களை அளித்து வந்துள்ள இவர், சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசில் நான்காண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வாரம் தோறும் எழுதியுள்ளார்.  சிஙகப்பூரின் வசந்தம், மலேசியாவின் வான்வில், இலங்கையின் மகாராஜா, இங்கிலாந்தின் ஐபிசி, ஆஸ்திரேலியாவின் ஏபிசி, சீனாவின்  சி.ஆர்.என் ஆகிய ஒலிபரபப்பு நிறுவனங்கள்  இவரின் பேட்டிகளை ஒலிபரப்பியுள்ளன.

பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன்  ஆகியோரது அயலகப் பயணங்களில், இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராகப் பங்கேற்றுள்ளார்.

சீனத்தில் உள்ள Boao forum என்ற அமைப்பு நடத்திய Round Table of  Media Leaders of Asia என்ற நிகழ்வுக்குத் தொடர்ந்து மூன்றாண்டுகள் (2014,2015,2016) அழைக்கப்பட்ட ஒரே பத்திரிகையாளர். இந்தியா –பாகிஸ்தான் இடையே நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பேனோஸ் (Panos) என்ற சர்வதேச அமைப்பால் கூட்டப்பட்ட இந்திய-பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் உரையாடலில் பங்கேற்ற்க அழைக்கப்பட்டவர். பிரிட்டீஷ் கவுன்சில் ஏற்பாடு செய்த Conference on Media, Public Interest and Issues of Regulation: Indo-UK Perspectives என்ற மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்ட ஒரே தமிழ்ப் பத்திரிகையாளர். Global Knowledge Foundation என்ற அமைப்பினால் நேபாலில் நடைபெற்ற ஊடகக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்ட ஒரே தமிழ்ப் பத்திரிகையாளர். South Asia Broadcasting in the satellite age, organized by British Council என்ற பொருளில் பிரிட்டீஷ் கவுன்சில் நடத்திய கருத்தரங்கில் ஓர் அமர்விற்குத் தலமை ஏற்றவர்

 ஹங்கர் புரோஜக்ட் என்ற சர்வதேச நிறுவனத்தின் தேசிய ஊடக ஆலோசகராகப் பணியாற்றிவர்.

 அமெரிக்காவின் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் கல்வி பெற்றவர். அங்கு மாணவராக இருந்தபோது, 1990களிலேயே , மின் இதழ்களுக்கான முன் மாதிரியை (prototype for electronic newspaper) வடிவமைத்தவர்.அங்கு Academic Excellence in Advanced Editing என்று விருதளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்

 2003ல் தமிழில் முதன் முதலில் யூனிகோடில் அமைந்த திசைகள் மின்இதழைத் துவக்கியவர்.

மைக்ரோசாஃப்டின் எம்.எஸ்.ஆபீஸ் பொதி தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்ததோடு அவர்களுக்காக கணிச் சொல் அகராதி ஒன்றினையும் தொகுத்தளித்தவர்.

 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செனட் உறுப்பினராக, அந்நாள் ஆளுநர்கள் டாக்டர்.சென்னா ரெட்டி, திரு.சுர்ஜித் சிங் பர் னா லா ஆகியோரால் நியமிக்கப்பட்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் இதழியல் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில் பங்களித்த இவர்  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் பங்களித்தார்.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின்  (முதுநிலை) பாடத்திட்டக் குழு உறுப்பினர்.

 அமெரிக்கா, இங்கிலாந்து, போச்சுகல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா,  சீனம்ஆகிய நாடுகளுக்கு அழைப்பின் பேரில் சென்று வந்துள்ள மாலன், சமகால இலக்கிய, அரசியல், விஷயங்கள் குறித்து மெல்பேர்ன், சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்பட பல அறிஞர் அவைகளில் உரையாற்றியிருக்கிறார்.

.மாலனைப் பற்றிய விக்கிப்பீடியா குறிப்பு: http://goo.gl/LbYI2.

8 thoughts on “அறிமுகம்

  1. Namaste Shri Maalan sir, your website is excellent and your 50 years of your journey in the feild as writter journalist, colunmn writter poems, political debates etc… Are really amazing, and you are a multifaceted and highly intellectual. As i am also from tamizhagam extremely proud of your journey. Much more awards and praying for you to reach the heights. Best of luck!!

  2. மிகவும் சிறந்த நடுநிலையாளர். தரமான கதைகள் அளித்த எழுத்தாளர்.
    அவரை பின் தொடர்வதில் மகிழ்ச்சி

  3. பத்திரிக்கையாளர், எழுத்தாளர் , அரசியல் விமர்சகர். கண்ணியமான வார்த்தைகளில் அரசியல் விமர்சனம் செய்வதால் அபூர்வமானவர்.

  4. ஐயா வணக்கம்..
    நான் புதியதலைமுறை புத்தகம் வெளிவரத்தொடங்கிய காலத்தில் 2011 – 2014 வரையிலான காலத்தின் வாசகன். அந்த சமயத்தில் போர் தொழில் பழகு, புலிகளின் புதல்வர்கள் மற்றும் பல எனது விருப்பமான தொடர்கள்.
    அவற்றுள் எனக்கு காதல் மீதான மிகுத்த மரியாதையை ஏற்படுத்திய ஒரு தொடர் வந்தது அதில் முழுவதும் அறிஞர்கள் மற்றும் தலைவர்களின் காதல் கதைகளை தொடராக வந்தது. அந்த தொடர் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.
    அனால் எனக்கு அந்த புத்தகத்தின் பெயர் மறந்துவிட்டது. அந்த புத்தகத்தை என் மனைவிக்கு காதலர்தின பரிசாக கொடுக்க நினைக்கிறன்.
    எனக்கு அந்த புத்தகத்தின் பெயரை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    அந்த தொடர் மாலன் அவர்கள் எழுதியதாகவே எனக்கு நினைவு ….

    நன்றி…

    அன்புடன்
    முத்துக்குமார்

    1. நன்றி. அந்தக் கட்டுரைகள் புதிய தலைமுறைப் பதிப்பகம் உயிரே உயிரே என்ற நூலாக வெளியிட்டது. அந்த நூல் இப்போது அச்சில் இல்லை. விரைவில் வேறு ஒரு பதிப்பகம் நூலாக வெளியிட உள்ளது. வெளி வந்ததும் தெரிவிக்கிறேன் அன்புடன் மாலன்

  5. அன்புள்ள
    மாலன், வணக்கம்
    தங்களின் சிறப்புக்கள் அறிந்து மகிழ்ச்சி. நெய்வெலி இலக்கியக்கூட்டத்தில் தங்களைப்பார்த்தது. சிவசங்கரி தினமணி முதல் சிறுகதை பரிசளிப்புவிழாவில் தங்கள் உரை கேட்டேன். உங்கள் பணி தொடர்க வளர்க நிறைக.
    எஸ்ஸார்சி

  6. மாலன் அவர்களைப் பற்றி கூடுலான விபரம் அறிந்தேன். அவரது உரைகளைத்தான் கேட்டுள்ளேன். ஆக்கங்களை அதிகமாக நான் வாசித்தது இல்லை. அவரைப்பற்றிய அறிமுகத்தை வாசிக்கும் போது இவ்வளவு நாட்களாக எனது தேர்வில் அவரது படைப்புகளை சேர்க்காதது வருத்தமாக உள்ளது. இனி தேடி வாசிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

    நன்றிகள்.

  7. மாலன் அவர்களைப் பற்றி கூடுலான விபரம் அறிந்தேன். அவரது உரைகளைத்தான் கேட்டுள்ளேன். ஆக்கங்களை அதிகமாக நான் வாசித்தது இல்லை. அவரைப்பற்றிய அறிமுகத்தை வாசிக்கும் போது இவ்வளவு நாட்களாக எனது தேர்வில் அவரது படைப்புகளை சேர்க்காதது வருத்தமாக உள்ளது. இனி தேடி வாசிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

    நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *