அறிமுகம்

IMG_1095

குமுதம், தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குங்குமம் ஆகிய தமிழகத்தின் முன்னணித் தமிழ் இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றித் தற்போது புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி வார இதழ்களின் ஆசிரியராகக் கடமையாற்றிவரும் மாலன் தனது எழுத்துலகப் பயணத்தை இலக்கியச் சிற்றேடுகளில் துவக்கியவர். மணிக்கொடி எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் எழுத்துஇதழ் மூலம் 15 வயதில் கவிதைக்கும், தனது கவிதைகள் மூலம் இலக்கியத்திற்கும் அறிமுகமான இவர் இன்று சிலாகிக்கப்படுவது இவரது சிறுகதைகளுக்காக.

ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படி இருக்கும்? இதோ இப்படி இருக்கும்என ஆனந்தவிகடன் இவரது சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதியது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற முன்னோடிகளாலும், பிரபஞ்சன் பாலகுமாரன், பொன்னீலன்,  போன்ற சமகாலத்தவராலும், சிட்டி, வல்லிக்கண்ணன் போன்ற விமர்சகர்களாலும், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளாலும் பாராட்டப்பட்ட இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பலகலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இவரது படைப்புக்கள் குறித்து ஒரு முழுநாள் கருத்தரங்கை நடத்தியது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழகத்தின் பல பல்கலைக் கழகங்களில் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.

 இவ்ரது கதைகள் ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா,(ஆங்கிலம்) டெகான் ஹெரால்ட், (ஆங்கிலம்) இந்தியா டுடே  (மலையாளம்) மாத்ருபூமி (மலையாளம்) விபுலா(இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கல்கத்தாவில் உள்ள Writers Workshop தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறது.சீனம் மலாய் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட கதையொன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் தொகுத்து வெளியிட்ட ஒரே வானம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

 இவரது கவிதைகள் சாகித்ய அகதாமியின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. எமெர்ஜென்சி நாட்களில் அதை விமர்சித்து இவர் எழுதிய கவிதை அமெரிக்காவின் டஃப்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரி தொகுத்த Voices of Emergency-an anthology of protest poetry என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இவரது புகழ் பெற்ற நாவலான ஜன கண மன ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு GG என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடத்தப்படும் ‘எழுத்தாளர் வாரம்  நிகழ்ச்சிக்கு 1993ம் ஆண்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு நிறுவனமான நூல்கள் மேம்பாட்டு மன்றத்தால் (Singapore National Book development Council) அந்நாட்டுப் படைப்பாளிகளுக்குப் புனைகதைப் பயிலரங்கு நடத்துமாறு அழைக்கப்பட்டவர்.2013ம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் (National Library Board) நடத்திய வாசிப்போம் சிங்கப்பூர் (Read Singapore!) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டவர்

சாவியால் துவக்கப்பட்ட  தமிழின் முதல் இளைஞர் இதழான திசைகள் இதழின் ஆசிர்யராக தனது இதழியல் பணிகளைத் துவக்கியவர். எண்பதுகளில் எழுத வந்த அத்தனை இளைஞர்களும் உச்சரித்த மந்திரச் சொல் மாலன்என விமர்சகர்களால் குறிப்பிடப்படும் இவர், நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என அனைத்து வகை ஊடகங்களிலும் செயலாற்றிய ஒரே தமிழ்ப் பத்திரிகையாளர். இந்திய மொழிகளில் முதன் முதலில் துவக்கப்பட்ட 24மணிநேர செய்தித் தொலைக்காட்சியான சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தியவர். பிபிசியின் தமிழ்ச் சேவைப் பிரிவான தமிழோசையில் 10 ஆண்களுக்கு மேலாக மாதந்தோறும் செய்தி விமர்சனங்களை அளித்து வந்துள்ள இவர், சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசில் நான்காண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வாரம் தோறும் எழுதியுள்ளார். தி ஹங்கர் புரோஜக்ட் என்ற சர்வதேச நிறுவனத்தின் ஊடக ஆலோசகராகப் பணியாற்றிவர்.

 அமெரிக்காவின் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். அங்கு மாணவராக இருந்தபோது, 1990களிலேயே , மின் இதழ்களுக்கான முன் மாதிரியை (prototype for electronic newspaper) வடிவமைத்தவர். 2003ல் தமிழில் முதன் முதலில் யூனிகோடில் அமைந்த திசைகள் மின்இதழைத் துவக்கியவர்.

மைக்ரோசாஃப்டின் எம்.எஸ்.ஆபீஸ் பொதி தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்ததோடு அவர்களுக்காக கணிச் சொல் அகராதி ஒன்றினையும் தொகுத்தளித்தவர்.

 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செனட் உறுப்பினராக, அந்நாள் ஆளுநர்கள் டாக்டர்.சென்னா ரெட்டி, திரு.சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோரால் நியமிக்கப்பட்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் இதழியல் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில் பங்களித்த இவர் இப்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் பங்களித்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின்  (முதுநிலை) பாடத்திட்டக் குழு உறுப்பினர்.

 அமெரிக்கா, இங்கிலாந்து, போச்சுகல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பின் பேரில் சென்று வந்துள்ள மாலன், சமகால இலக்கிய, அரசியல், விஷயங்கள் குறித்து மெல்பேர்ன், சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்பட பல அறிஞர் அவைகளில் உரையாற்றியிருக்கிறார்.

.மாலனைப் பற்றிய விக்கிப்பீடியா குறிப்பு: http://goo.gl/LbYI2

_____________________________________________

Maalan V. Narayanan is a writer by choice and a journalist by profession .Born in India in 1950.he graduated from Madurai University and later pursued his higher studies in journalism at University of Florida, Gainesville, USA. He has 15 titles to his credit, some of which have won awards and many of them are being discussed in university class rooms of contemporary writing.

He was guest of honor in some literary festivals including  Writers’ Week celebrations of Singapore and Read Singapore. His poems have found a place in the anthology of protest poetry, Voices of Emergency, compiled by Prof. John Oliver Perry of Tufts University, USA and in the Anthology of Tamil poetry by Sahitya Academy of India. One of his short story  find a place in Under one sky, a multilingual anthology published by Singapore National Library board. Some of his short stories in translation have appeared in the leading English and Indian Language magazines and the Anthology of Modern Tamil Stories published by Writers’ Workshop, Calcutta.  His political fiction, Jana Gana Mana  first of its kind in Tamil has been published in English Translation.

He was invited to deliver lectures at University of Melbourne, National University of Singapore and University of Malaya. He has served as  a member of the steering committee of the World Tamil Writers’ Conference organized by National Arts Council and Singapore Tamil writers’ Association. He was the convener of International Conference on Tamil Diaspora writing held in Coimbatore in 2014 wherein 35 writers and scholars from 17 countries participated  

He is a member of Tamil advisory board of Sahitya Akademi (National academy of letters of India) and Commonwealth Journalists Association and South Asian Literary Association. He has served in the Senates of Manonmaniam Sundranar University and Bharathidasan University as Tamilnadu Governor’s nominee.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *