கனவே சாம்ராஜயம்

ஒரு கோடி கனவினில்  விழி மூடித் துயில்கையில்

           உற்சாகம் கொள்ளுகின்றேன்

உறவு பகை இல்லாத பெரும் வெளிப் பரப்பினில்

உல்லாசப் பள்ளி கொண்டேன்

 

திரு கோடி வருவதை தெரு கூடிக்  கொள்கையில்

திண்ணையில் தூங்குகின்றேன்

தினம் கோடிக் கனவுகள்  மனமாடி விரிந்திடும்

     திருப்தியில் ஓங்கி நின்றேன்

 

எரு கூட்டில் வைத்து என்னை எரிக்கின்ற நாள் வரினும்

          வெருளாது எந்தன் மனமே

வெருள்தலும் அருள்தலும் விளைந்த இவ் வாழ்க்கையும்

           விளையாட்டு மிக்க கனவே

 

 

விண் கூடி வந்தாலும் வினை கோடி செய்தாலும்

     வீழ்ந்திட வேண்டும் ஓர் தினமே

     விடிகாலம் வரும் வரையில் விழிமூடிக் கனவினில்

        விளையாடின் துன்பம் படுமே

 

கண் மூடி மேனியை மண் மூடும் முன்னரே

       கனவினில் மயங்கிடு எந்தன் மனமே

மனமூடிக் கிடந்து உன்னை ,மருட்டிடும் கவலைகள்

      மறைந்தேகும், மாளாத சுகமே

 

தண்கூடி உடல் தன்னைத் தந்திட்டுப் போகும் முன்

தயங்காது சொல்லு மனமே

தளராத கனவினில் அயராது துயில்வோரை

தழுவாது மரண பயமே

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these