ஈரோடு புத்தகத் திருவிழா

கோயம்புத்தூர்

அறச்சீற்றத்துடன் கவிதை எழுதும் கவிஞர்களே தேவை

 

First Published : 11 Aug 2012 12:57:59 PM IST

 

 

ஈரோடு, ஆக.10: தற்போதைய சூழலில் அறச்சீற்றத்துடன் கவிதை எழுதும் கவிஞர்கள்தான் தமிழகத்துக்கு தேவை என்றார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் "காவியத் தாயின் இளைய மகன்என்னும் தலைப்பில் அவர் பேசியது:

ஈரோட்டுக்கும், புத்தகத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. நான் ஏன் நாத்திகன் ஆனேன்என்ற பகத்சிங் எழுதிய புத்தகத்தை தமிழாக்கம் செய்த ஜீவாவின் நூலை பதிப்பித்தவர் பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணன்தான்.

ஒவ்வொரு பருவம், உணர்வு, உறவு தனித்தனி பாடல்களை தந்தவர் கவிஞர் கண்ணதாசன். கம்பனின் இலக்கியத்தை கற்று தேர்ந்தவர். தனது கவிதையில் பாரதியின் சாயலையும் கொண்டவர். கண்ணதாசனின் திரைப்பட பாடல்களை மட்டுமே வைத்துக் கொண்டு அவரை அளவிடக் கூடாது. அவரது தனிப் பாடல்களையும் சேர்த்துதான் அளவிட வேண்டும்.

போலித் தனத்தைப் பற்றி ஆத்திரமாகக் கவிதை பாடியவர் கண்ணதாசன். அரசியல் தலைவர்களை புகழ்ந்து, இகழ்ந்து பாடுவதில் கண்ணதாசனுக்கு நிகர் அவர்தான். இரட்டை வேடம், ஜாதி அரசியல், போலி அரசியல் உள்ளிட்டவற்றை தனது அறச்சீற்றப் பாடல்கள் மூலம் எதிர்த்தவர்.

ஆனால், இப்போது அதுபோன்ற கவிஞர்கள் இல்லை. அறச்சீற்றத்துடன் கவிதை எழுதும் கவிஞர்கள் இன்றைய தமிழகத்துக்கு தேவை, என்றார்

 

http://tinyurl.com/c6vatqn
[Open in new window]

Or, give your recipients confidence with a preview TinyURL:

http://preview.tinyurl.com/c6vatqn
[Open in new window]

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *