சிந்தனையைக் கிளறும் தெய்வங்கள்

வேலன் என்பது முருகனின் இன்னொரு பெயர் என்றுதானே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? அதுதான் இல்லை. சிலப்பதிகாரத்தில் (கி.பி.2ம் நூற்றாண்டு) குறிப்பிடப்படும் மூன்று முருகன் தலங்களில் ஒன்று திருச்செந்தூர் என்று தெரியுமா உங்களுக்கு?ஆழ்வார்களின் பாடல்கள் ஏன் கீதை உரைத்த கிருஷ்ணனை அதிகம் பாடவில்லை கண்ணனைத்தான் பாடுகின்றன என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

பேராசிரியர் தோ.பரமசிவன் எழுதியுள்ள தெய்வம் என்பதோர் என்ற சிறிய நூல் பெரும் கேள்விகளுக்கு வித்திட்டுச் சிந்தனைகளைக் கிளறுகிறது. பேராசிரியர் பெரியாரியலாளர்.. ஆனால் பக்தி இலக்கியங்களை ஆழ்ந்து பயின்றவர். அவற்றில் உள்ள இலக்கிய நயங்களையும் சுவைகளையும் அவர் மறுப்பவர் அல்ல. இன்னும் சொல்லப் போனால் இந்த நூலின் பெயரான தெய்வம் என்பதோர்  என்பதே தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி என்ற மாணிக்கவாசகரின் திருவாசகம்

நம் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் நம் பண்பாட்டின் அசைவு இருக்கிறது. பல் துலக்குவது போன்ற சிறிய செயல்களிலிருந்து, வீடுகளை வடிவமைப்பது போன்ற சாதனைச் செயல்கள் வரை எல்லாவற்றிலும் கலாசாரம் நிழலிட்டிருக்கிறது என்று மானிடவிய;லா:ளர்கள் சொல்வதுண்டு. நம்முடைய சில வழிபாடுகளின் பின்னுள்ள பண்பாட்டு வரலாற்றை, கலாசார அரசியலை அறிந்து கொள்ள விருப்பமுடையவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

சில நாள்களுக்கு முன்தான் மார்கழி கடந்து சென்றது. மார்கழி நெடுகவும், ஆலயங்களில் மட்டுமல்ல,  தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், இணையம் எல்லாவற்றில் ஆண்டாளின் திருப்பாவை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ப் பொலிந்தது.,. திருப்பாவையில் ஆண்டாள், மால், மணிவண்ணன், கோவிந்தன், மாதவன், மாமயன், வைகுந்தன், நாராயணன், யமுனைத் துறைவன், முகில் வண்ணன் என நாம்ம் பலவும் நவின்று கொண்டாடுகிறார். ஆனால் திருப்பாவையில்கிருஷ்ணன் என்ற பெயர் கிடையாது  தென்னிலங்கைப் போர் (ராமாயணம்), ஓங்கி உலகளந்த்து, குன்றைக் குடையாகப் பிடித்தது எனப் பலவற்றைப் பட்டியல் இடுகிறார். ஆனால் கீதை உபதேசித்த்தைப் பற்றி ஏதுவும் சொல்வதில்லை. சுருக்கமாகச் சொன்னால் பாவையின் பாட்டில் பாகவதம் உண்டு. ஆனால் பாரதம் கிடையாது. ஏன்> கிருஷ்ணனுடைய கதையின் Landmark பாரதப் போரும் கீதையுமல்லவா? அதை விட்டுவிட்டு எப்படி எழுதியிருக்க முடியும்?

இந்தக் கேள்விக்கு தொ.பரமசிவன் நேரடியாகப் பதில் சொல்லவில்லை ஆனால் சங்க்காலத்தில்யே வைணம் இருந்த்து. பின் சிலப்பதிகாரத்திலும் பாகவதக் கதைகள் பேசப்படுகின்றன. கீதை உரைத்த கிருஷ்ணனைப் பற்றிய் குறிப்புகள் ஒன்றிரண்டு மட்டுமே காணப்படுகின்றன எனச் சொல்வதன் மூலம் பாரதம் பின் வந்தது என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறார்.

“வேறு யாரும் பேசத் துணியாத ஒரு செய்தியினை பாரதி கண்ணன் என் தாய் என்ற தலைப்பில் பேசுகிறார். “வரலாறு என்பது மதக் கொலைகளாலும் அரசர்களின் கூத்துக்களாலும் ஆனது, வேதங்களிலும் பொய் வேதங்கள் உண்டு. மூத்த தலைமுறையினரும் பொய் நடைக்காரராக இருப்பர்” என்ற பொருள் தரும் வரிகளை எடுத்தாண்டு இதனைச் சொல்லும் துணிவு பாரதிக்கு முன்னிருந்த கவிஞர்களுக்கு இல்லை என்று தொ.ப. எழுதுவது  பாரதியைப் பற்றிய அவரது குறிப்பொன்று பாரதியின் புகழை விகசிக்கச் செய்வதாக இருக்கிறது

ஆனால் நூலில் விவாதத்திற்குரிய கேள்விகள் இருக்கின்றன. ”விசய நகர ஆட்சிக்காலத்தில் சைவ வைணவ சமயங்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து வைதீக மரபுகளுக்கு அடிமைப்பட்டுப் போயின” என்று எழுதுகிறார் தொ.ப. (‘வரலாற்று நோக்கில் முருக வழிபாடு’) ஆனால்  9 ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் அர்ச்சமுறை. (16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடும் முறை) . கொண்டவை. ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் வீர சைவம் உருவானது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. குறிப்பாக சங்கரன் கோயில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது என்பது வரலாறு.  எனவே விசய நகர ஆட்சிக்காலத்தில் சைவ வைணவ சமயங்கள் வைதீக மரபுகளுக்கு அடிமைப்பட்டுப் போயின” எனப் பொதுமைப்படுத்திவிட முடியாது.

வரலாற்றிலும் பண்பாட்டிலும் நாட்டமுள்ளவர்கள் வாசித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்

தெய்வம் என்பதோர் –தொ.பரமசிவன் – மணிபதிப்பகம் 29Aயாதவர் கீழத் தெரு-திருநெல்வேலி 627002 விலை ரூ.60/=

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *