“நடுநிலைப் பார்வையில் பார்க்கப்பட்ட செறிவான கட்டுரைகளின் தொகுப்பு “

என் ஜன்னலுக்கு வெளியே பற்றி தினமணி

25.2.2013

அன்றாட சமூக நிகழ்வுகள் தன் மனத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை 41 கட்டுரைகளாக்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மாலன்.பெரும்பாலான சம்பவங்கள் நாம் அறிந்தவையேயாயினும் அவற்றை இவர் பார்க்கும்கோணமும் அதனையொட்டி இவர் எழுப்பும் கேள்விகளும் மிகவும் ஆழமானவையும்அர்த்தமுள்ளவையுமாகும்.

ஒவ்வொரு திருநாளையும் பொருள் பொதிந்ததாக மாற்றச் சொல்லும் “வெறும்நாள்களாகும் திருநாள்கள்‘, பூமிக்குக் கீழே 2000 அடி ஆழத்தில் 69 நாட்கள்சிக்கிக் கொண்ட சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து நாம் பயில வேண்டிய மானுடப்பண்பை சொல்லும் “சின்ன தேசம் சொன்ன பாடம்போன்ற கட்டுரைகள் சிறப்பானவை.

பாசாங்கற்ற மொழிநடை, கறாரான சொற்சிக்கனம், அடிநாதமாயிருக்கும் அக்கறைதொனி இவையே இக்கட்டுரைகளை சிறப்பாக்குகின்றன. சில கட்டுரைகள் ஜெயகாந்தனின்நினைத்துப் பார்க்கிறேன்‘-ஐ நினைவுபடுத்துகின்றன. ஒரு கட்டுரையில் வரும்பெப்சி நிறுவன தலைமை அதிகாரி இந்திரா நூயி தன் மகளைப் பற்றிஎழுதியிருக்கும் பகுதி ஆண்களை மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியது.

அநேகமாக எல்லாக் கட்டுரைகளிலுமே பாரதியார், காற்று, மழை, குழந்தைகள், காகம் என்று அடிக்கடி வந்து கொண்டிருப்பது ஒன்றும் குற்றமல்ல. ஒரு ஜன்னலைப்போலவே எதையும் சாராது, நடுநிலைப் பார்வையில் பார்க்கப்பட்ட செறிவானகட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

என் ஜன்னலுக்கு வெளியே – மாலன்; பக்.152; ரூ.100; புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை-32; )044 – 4596 9500.

http://dinamani.com/book_reviews/article1477381.ece

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *