சொல்லாத சொல் பற்றி சமாச்சார்.காம்

ஒருகட்டுரையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளை ஒட்டி சொல்லாமல் விடப்பட்டதைஎப்படிக் கண்டுபிடிக்கலாம்? வரிகளினூடே ஒளிந்திருக்கும் கருத்துக்களைஎப்படி வாசகர்கள் கண்டுபிடிக்கலாம்? வாசகர்கள் கட்டுரையை வாசிக்கும்போதும்அதன் முடிவிலும் கட்டுரையின் கருத்தோட்டமும் அதற்கு எங்கே முற்றுப்புள்ளிவைக்கப்படுகிறது என்பதும் சொல்லப்படாதவற்றைச் சுட்டிக் காட்டும். இதற்குக்கருத்தோட்டம் எப்படியிருக்க வேண்டும்? எழுதும் நடையில் ஒரு இயக்கத்தை உண்டுபண்ண வேண்டும்; படிப்பவர்களிடையே தங்கு தடையில்லா வினைகளையும்எதிர்வினைகளையும் ஏற்படுத்தவேண்டும்; அவர்களை அறிவுப்பூர்வமாகத் திசைத்திருப்ப வேண்டும். Movement, amplification and digression என்றுகருத்தோட்டம் ஏற்படுத்த வேண்டியத் தாக்கங்களைப் பட்டியலிடுகிறார் பார்பராஸ்மித் என்பவர். முடிவு என்பது வெறுமனே எழுதப்படக்கூடாது. படிப்படியாகமுதல¦டு செய்யப்படவேண்டும் என்பது அவர் கருத்து.

துப்பறியும் நாவல்போல அல்ல கட்டுரைகள். துப்பறியும் நாவல்களில் சில பக்கங்களைப்படித்தவுடனேயே முடிவைப் படித்துவிட்டு பின் உள்ளே ம¦ண்டும் பக்கங்களைப்புரட்டுவது இயல்பு. அதுபோல இல்லாமல் கட்டுரையைப் படிக்கும்போதேசொல்லப்பட்டவைகளும் சொல்லப்படாத முடிவுகளும் புலப்பட வேண்டும். மாலன் தன்சொல்லாத சொல்” புத்தகத்தில் இதைத்தான் செய்திருக்கிறார். புத்தகத்தில்வெளியிடப்பட்டுள்ள 39 கட்டுரைகளும் சிங்கப்பூரில் தமிழ்முரசு நாளிதழில்வெளிவந்தவை. தமிழ்முரசில் வெளியிடப்பட்ட கதைகள், கவிதைகள் பல இதுவரைபுத்தகங்களாக வந்திருக்கின்றன. ஆனால் முரசின் 68 ஆண்டு வரலாற்றில்இப்போதுதான் எழுத்தாளர் ஒருவரின் கருத்துக்கட்டுரைகள் (column) ஒரு நூலாகவெளிய¦டு கண்டுள்ளதாக அதன் ஆசிரியர் டாக்டர் சித்ரா ராஜாராம் தன்முன்னுரையில் கூறுகிறார். இக்கட்டுரைகளில் குறிப்பாக, அயோத்திப் பிரச்னை, ஈராக் போர், சிங்கப்பூரில் சார்ஸ் போன்ற சில பலத்த சர்ச்சைகளை எழுப்பியவை.பெரும்பாலான கட்டுரைகள் டாக்டர் சித்ரா ராஜாராம் சொன்னது போல சாதாரணவாசகர்களையும் இங்கு கோப்பிக் கடைகளில் அமர்ந்து அதைக் குறித்துப் பேசத்தூண்டியவை. உலக நடப்புகள், இந்திய, தமிழ்நாட்டு அரசியல், வாழ்க்கையியல், இலக்கியம், நாட்டு நலம் என பயனுள்ள கருத்துச் செறிவுகளை எங்களுக்குக்கொடுத்தது மாலன் அவர்களின் “சொல்லாத சொல்”.

பெரும்பாலும் கட்டுரைகளைமாலன் ஒரு கதை சொல்லியே தொடங்குகிறார். கதையின் பாத்திரங்களுக்குப்பின்னால், அவர்கள் பேசும் வார்த்தைகளுக்குப் பின்னால் அவரேஒளிந்துகொள்கிறார். அந்தக் கதையின் முடிவை நேரடியாக நமக்குச் சொல்லாமல்பின் அதைக் கட்டுரையின் கருத்தில் புகுத்துகிறார். அதாவது பேசிக்கொண்டே ஒருமருத்துவர் ஊசிக் குத்துவது போல. பின், கதையின் மூலம் வந்து விழுந்தகருத்தின் பின்ணணியில் கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்கின்றனர் வாசகர்கள்.கட்டுரையாளர் இப்போது மௌனியாகி விடுகிறார்.

கவிதைகள் தலையில்அணியும் மகுடமோ, காலில் குலுங்கும் கொலுசோ அல்ல. அவை நம்மிடம்கொடுக்கப்பட்டுள்ள சாவிகள். நம்மை நாமே திறந்து பார்க்க, சமூகத்தை அதன்¦து பூட்டப்பட்டுள்ள விலங்குகளில் இருந்து விடுவிக்க, எதிர்காலத்தின்புதிர்களைத் திறக்க நம்மிடம் ஆசிர்வதித்து கொடுக்கப்பட்டுள்ள சாவிகள்.” -(கட்டுரை: தொலைந்த சாவிகள்) – இது கட்டுரையாளர் சொல்ல வந்த கருத்து. இதைபாட்டி ஒருவர் வ¦ட்டினுள் சாவியைத் தொலைத்தக் கதையைச் சொல்லிஆரம்பிக்கிறார். மாற்றுச் சாவியையும் கையில் வைத்துக்கொண்டு, ¦ட்டிற்குவெளியே சாவியைத் தேடுகிறார் அந்த கிழவி. வெளியே வெளிச்சமாக உள்ளது; எனவேவெளிச்சத்தில் தேடுவது வசதி ஆதலால் அங்கே தேடுகிறேன் என்று அந்த கிழவிதன்னைப் பார்த்து வியப்படையும் வாலிபனுக்குப் பதில் கூறுகிறார். இதுதான்கதை.

ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் வேறு வழிகளில் சொல்வது வாசகர்களிடம்இருந்து தப்பிக்க வழி என்பது சில இலக்கியவாதிகளின் கருத்து. சொல்லவேண்டிதைச் சொல்லாமல் இருப்பதும், தொடர்ச்சியாக அதைத் தவிர்ப்பதும்எழுத்தாளரின் கருத்திற்கு பலமூட்டும்; சில சமயங்களில் மௌனம்எழுத்தாளர்களின் பலத்தை அதிகரிக்கும் வழி என்பது விமர்சகர்களின் பார்வை.தன் வாதத்தை சொல்வதும், வார்த்தைகளால் சண்டையிடுவதையும் (flight and fight) விட சொல்லாமல் இருக்கும் சொற்கள் வாசகர்களை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவைக்கும்; ஆக்கப்பூர்வமாக பேச வைக்கும். இது பெரும்பாலும் நாடகங்களில்மேற்கொள்ளப்படும் யுக்தி. இதை மாலன் தம் கருத்துக் கட்டுரையில்பின்பற்றியிருப்பது புதுமையானது. நேருக்கு நேர் உரக்கப் பேசாமலும், உணர்ச்சிவசப்படாமலும் அதே சமயம் வாசகர்களைத் தட்டிக் கழிக்காமலும்கட்டுரையாளர் வாசகர்களை கவர்கிறார். மாலன் கட்டுரைகள் தற்காலச்சிந்தனையுடனும் மொழிநடையுடனும் சிலசமயங்களில் அண்மையத் தலையாயப் பிரச்னைகளைஅலசும் நோக்குடனும் எழுதப்பட்டிருக்கிறது. தன் எழுத்து நுணுக்கத்தையும்கருத்தையும் மட்டும் வாசகர்களிடம் நிலைநிறுத்தும் சுயநலப்போக்கு இல்லாமல்சொல்லாத சொல்” கட்டுரைகள் புதிய பார்வை, சுயசிந்தனை, தன்னார்வத்தைவாசகர்களிடம் தூண்டுகிறது. இக்கட்டுரைத் தொகுப்பு “மாலன்” என்னும்தனிப்பட்ட எழுத்தாளரின் சித்தாந்தம் என்பதை ஒரு காலத்தின் அடையாளமாகமாற்றியிருக்கிறது. இலக்கியப் படைப்புகள் தனிமனிதனின் வெளிப்பாடாக இருக்கவேண்டியத் தேவையில்லை என்று 1960களின் பிற்பகுதியில் உருவான கருத்தோடுகட்டுரைகள் ஒத்து போகிறது. ஒரு எழுத்தாளருக்குப் பிரத்தியேகமாகக் கிடைத்ததாக்கங்கள், அவர் படித்த மூல நூல்கள் ஆகியவையே அவருடையத் தனிப்படைப்புகளைஉருவாக்க வேண்டும் என்பது அவசியமில்லை, ஒரு இலக்கியப் படைப்பு அதற்குமுந்திய மற்றும் அதோடு ஒத்த படைப்புகளின் கருத்தை உள்வாங்கிக்கொண்டதாகவும், மாற்றியமைத்ததாகவும் இருக்க வேண்டியதில்லை என்பது நவனெஇலக்கிய உலகில் ஒரு கோட்பாடு. (உதாரணம்: ஜூலியா கிரிஸ்டெவாவின் “Word, Dialogue, Novel”) இந்த உத்தி “intertextuality” எனப்படும். அதாவது ஒருநெசவாளி பட்டுப் புடவையை க¦ழே அமர்ந்து நெய்யும்போது மேலிருந்து பூ, கொடி, மயில், அன்னம் என்று டிசைன்களை அதில் இறக்குவது போல.

இதையேத் தமிழில்ஊடிழைப்பிரதி” என்றுக் கூறுகிறோம். மாலன் வெறும் இலக்கிய மேற்கோள்களைக்காட்டாமல் ஏராளமான இலக்கிய, அரசியல், வாழ்க்கை அனுபவங்களை கட்டுரைகளில்எழுதியிருப்பது பல ஊடிழைப்பிரதிகளுக்கு உதாரணமாக இருக்கிறது. ஒவ்வொருகட்டுரையிலிருந்தும் இதை எடுத்துக்காட்டமுடியும். கதை சொல்வது, நாடகயுக்தி, தன் எழுத்துக்களை பிறர் எழுத்துகளோடு பொருத்தமாக நெய்வது, செய்தியோடு கண்ணாமூச்சி விளையாட்டு- என பல புதிய அணுகுமுறைகளை “சொல்லாதசொல்” கருத்துக்கட்டுரைகளை எழுதுவதில் உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்மாலன்.

என்ன நோக்கத்திற்காக நான் சிறுகதைகள் எழுதி வந்தேனோ, சிறுகதைகள் மூலம் நான் என்ன செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டேனோ அதுஇந்தக் கட்டுரைகள் மூலமும் நிறைவேறி இருக்கிறது. வாசகர்களை அவர்களதுமூளையைக் கொண்டே சிந்திக்கத் தூண்டுவதுதான் என்னுடைய சிறுகதைகளின் நோக்கம்என்று பலமுறை எழுதியும் சொல்லியும் வந்திருக்கிறேன். அது இந்தக் கட்டுரைகள்மூலமும் சாத்தியமாகி இருக்கிறது.” – என்று தன் முன்னுரையில் கூறுகிறார்ஆசிரியர். கட்டுரையாளர் மாலனின் இந்த வெற்றி தமிழ்முரசுக்குப் பல புதியவாசகர்களையும் தந்துள்ளது.

அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில்கருத்து, உத்தி, தகவல்கள், என்று எல்லா விதங்களிலும் செறிவான விருந்து இது.ஆழமும் விரிவும் கொண்ட ஒரு வித்தியாசமான தொகுதி.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *