குண்டூசிமுனையில் கவிதை எழுதலாம், குண்டூசி முனையில் உலகைக் காண முடியுமானால்என்றார் மா சே துங். மாலனின் ஒவ்வோரு கட்டுரையும் ஒரு பிரசினையைச்சார்ந்ததுதான். ஆனால் துப்பாக்கியினுள்ளே இறுக்கித் திணிக்கப்பட்டிருக்கும்மருந்து போல ஒவ்வொரு கட்டுரையினுள்ளும் எத்தனை விதமான செய்திகள்திணிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக பாரதியின் சிந்தனைகளை அவர் தன்கட்டுரைகளின் ஊடே விதைத்திருக்கும் முறை.சொல்லாத சொல்லாக அவை ஒவ்வொன்றும்நம்மிடம் எவ்வளவோ பேசுகின்றன.
39 கட்டுரைகளும் பிரசினைகளை மையமாகக்கொண்டவை. சென்ற கால் நூற்றாண்டின் முக்கியப் பிரசினைகள் பலவும்அலசப்பட்டிருக்கின்றன. சிறுகதையும் கட்டுரையும் தனித்தன்மை கொண்ட இரு வேறுதுறைகள்.சிறுகதை வாசகனின் உணர்வைக் குறி வைத்துப் பாயும். கட்டுரையோஅறிவைக் குறி வைத்துப் பாயும். வாசகரின் அறிவை உணர்வை நோக்கிக் குவிப்பதுசிறுகதை. வாசகரின் உணர்வை நோக்கி அறிவைக் குவிப்பது கட்டுரை. மாலனின்கட்டுரைகள் பல்வேறு உணர்ச்சிகளைக் கிளப்புகின்றன. ஆனால் அவை அறிவைகுறிவைத்தே அவற்றைக் குவிக்கின்றன. அருமையான கட்டுரைகள்