என் புதிய புத்தகம்

Kayal parukiya kadal wrapper

இனி வரும் தலைமுறையாவது பாரதி என்னும் ஆளுமையை முற்றாக உணர்ந்து கொள்ளட்டும். பாரதியை ஒரு கவிஞனாக மட்டுமே அறிந்து, அவரது சில வரிகளை மேற்கோளாக மட்டுமே பயன்படுத்திவரும் ஒரு தலைமுறை அவரது எல்லாப் பரிமாணங்களை அறிந்து கொள்ளும் போது, அவர் எப்படி சிறுகதையைக் கையாண்டார், எப்படிப் பத்திரிகைச் செய்தியைப் படைப்பாக மாற்றினார் என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும் போது வளைந்து போன வரலாறு நிமிர்வு கொள்ளலாம். இலக்கியம் என்பது பழங்கதைகளுக்குப் புது முலாம் பூசுவது அல்ல, இலக்கியம் என்பது நுகர் பொருள் அல்ல, அது ஒரு சமகால சமூக ஆவணம் என்ற உண்மை உறுதிப்படலாம்.

அதை நோக்கி அடுத்த தலைமுறையை இட்டுச் செல்வதற்கான ஓர் அணில் முயற்சி இந்தக் கட்டுரைகள். பாரதியைப் பற்றிய பார்வையைத் தருவதோடு மட்டுமின்றி, தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படும் இலக்கியமல்ல என்ற வெளிச்சத்தையும் அவை உங்களுக்குத் தரும்.

2 thoughts on “என் புதிய புத்தகம்

  1. கோ.புண்ணியவான்

    உங்களுடைய புதுமைப் பித்தனின் எக்ஸ்ரே படித்தேன். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையை நினைவுகூர்ந்தது. களம் ஒன்றுதான் கதை வேறொன்று. சுவையாக பயணித்தேன். புதுமைப்பித்தன் அறிவியல் (உம் டிவி) முன்னேற்றங்களைக் கண்டு வினாவெழுப்பும்போது மற்றவர் எந்த சலனத்தையும் காட்டவில்லையே. வியப்படையவில்லையே. நான் புரிந்துகொள்ளாத ஏதும் சூட்சமம் உண்டா? நன்றி.

    Reply

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *